தமிழ் அமுதம்( Tamil Amutham)
வளமுடன் வாழ்வோம்;தமிழை வாழவைப்போம்! (காலாண்டு இதழ்)
சனி, 21 பிப்ரவரி, 2015
புதன், 6 அக்டோபர், 2010
தமிழ் அமுது 6
உலக தமிழர்கள் தமிழ் அமுதம் காலாண்டு இதழுக்கு நல்லாதரவு நல்க வேண்டும் என்பது தான் என்னுடைய வேட்கையாகும். படித்து பார்த்து கருத்தினைத் தெரிவிக்கவும்.
வியாழன், 9 செப்டம்பர், 2010
செவ்வாய், 6 ஜனவரி, 2009
செவ்வாய், 30 டிசம்பர், 2008
தமிழ் அமுதம்
தலையங்கம்
தமிழுக்கு அமுது என்றும் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றும் பாடிய பாவேந்தர், சுவைக்கு அமுதத்தையும் தரத்திற்கு உயிரையும் ஒப்பிட்டுப் பாடியுள்ளார். இதன் பொருளை நன்கு உணர்ந்த நம் முன்னோர் தமிழின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் அரும்பாடுபட்டுள்ளார். நம் சின்னஞ் சிறிய சிங்கையில் 1940-களில் 40-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இருந்தன என்பதே அதற்குரிய சான்றுகளில் ஒன்றாகும்.
அவர்களின் வழி வந்த நாமும் நம்மால் இயன்ற அளவுக்குத் தமிழ் தொண்டு செய்யவேண்டும். தமிழராகப் பிறந்தவர்கள் இதைத் தம் கடமையாகக் கொள்ளவேண்டும். சிங்கையின் வளர்ச்சிக்கு தமிழர்கள் அரும் பணியாற்றியுள்ளனர். அதன் விளைவுதான் மக்கள் செயல் கட்சியின் அரசு தமிழை நான்கு அரசாங்க மொழிகளில் ஒன்றாக்கியது. இன்றைய தலைவர்களும் இளைஞர்களும் கடந்த காலத்தை எண்ணிப் பார்த்துத் தமிழின் வளர்ச்சிக்கும் செம்மைக்கும் தொடர்ந்து செயலாற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
அந்நோக்கத்தில்தான் தமிழ் அமுதம் வருகிறது. தமிழ் அமுதத்தில் கதை,கட்டுரை,கவிதை, இலக்கியம்,துணுக்கு,கேள்வி-பதில்,வாசகர் வட்டம் எனப் பல அங்கங்கள் உள்ளன. மாணவர், இளைஞர், ஆசிரியர், பெற்றோர், பெரியோர் எனப் பலரும் தங்கள் எண்ணங்களை எழுதி அனுப்பலாம். அதே வேளையில் தமிழ் அமுதத்தை அனைவரும் வாங்கிப் படித்து அதில் உள்ள குறை நிறைகளை எவ்விதத் தயக்கமும் இன்றிக் கேள்வி-பதிலுக்கோ, வாசகர் வட்டத்திற்கோ எழுதுங்கள். நீங்கள் வாழும் வட்டாரத்தில் நிகழும் நிகழ்ச்சிகளையும் உங்களின் சொந்த படைப்புகளையும் தமிழ் அமுதம் ஆர்வத்தோடு வரவேற்கிறது.
தமிழ் அமுதம் வெளிவரச் சிலர் ஊக்கம் கொடுத்தனர். சிலர் தோள் கொடுத்தனர். வேறு பலர் பல்வேறு வழிகளில் உதவியுள்ளார். குறிப்பாக ஆனந்த பவன் உணவகத்தின் உரிமையாளர் திரு மு.கு.இராமச்சந்திரா அவர்களும், எம்.எம்.ஐ. பாலர் பள்ளி நிறுவனத்தின் உரிமையாளர் முனைவர் திரு.டி.சந்துரு அவர்களும், தமிழ் ஆர்வலர் திரு.எம்.ஏ. முஸ்தபா அவர்களும், ஜோதி ஸ்டோர் உரிமையாளர் திரு. ராஜ்குமார் அவர்களும் தமிழ் அமுதத்திற்குப் புத்துயிர் கொடுத்துள்ளனர். ஆதரவளித்த இவர்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவிய ஏனைய எல்லாருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் அமுதம் நம்முடையது.நாம் அனைவரும் ஒன்றுபட்டுத் தமிழ் அமுததிற்குத் துணையாக இருந்து தமிழின் வளர்ச்சிக்கும் தமிழர்களின் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து பாடுபடுவோம்.

பி.சிவசாமி
ஆசிரியர்
தமிழ் அமுதத்தின் சிறப்பு
தமிழின் அருமை பெருமைகளை அறிந்திருக்கிறோம். அதன் பழமையைத் தெரிந்திருக்கிறோம். தமிழ்மொழி இலக்கண இலக்கியங்களைப் பெற்றுத் திகழ்கிறது என்பதையும் உணர்கிறோம். அதோடு தோன்றிய மொழிகள் பல அழிந்து விட்ட போதும் சீனமொழியைப் போல் தமிழ் இன்றும் சிறந்து விளங்குவதைப் புரிந்திருக்கிறோம். அப்படிப்பட்ட அரியதொரு மொழியைப் பெற்றிருக்கின்ற நாம் அம்மொழியைப் பெருமையோடு பேசவோ, படிக்கவோ துணிவில்லாமல் இருக்கிறோம். இது புரியாத புதிராக இருக்கிறது.
சீன, மலாய் மாணவர்கள் படிப்பதற்குப் பல இதழ்கள் உள்ளன. தமிழ் மாணவர்களோ, பெரியவர்களோ படிப்பதற்குச் சிங்கப்பூரில் தமிழ் நாளிதழை விட வேறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இக்குறைபாட்டைப் போக்கவே தமிழ் அமுதம் வந்துள்ளது. தமிழ் அமுதத்தை அனைவரும் வாங்கிப் படிப்பார்கள் என்று நம்புகிறோம். அதோடு தமிழ் அமுதம் இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. இப்போது தமிழ் அமுதக் கட்டுரைகளை இணைய தளத்திலும் படித்தறிய வாய்ப்புள்ளது. இதையும் மாணவர்களும் பெரியோர்களும் படித்துவிட்டுத் தங்களின் கருத்துகளைச் சொல்லலாம்.சிராங்கூன் வட்டாரத்தில் உள்ள GGS புத்தக்கடையில் நீங்கள் தமிழ் அமுதத்தை வாங்கிக் கொள்ளலாம். இதன் விலை $3 வெள்ளி மட்டும்தான். உடனே உங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள்!
அன்புடன்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)