தமிழின் அருமை பெருமைகளை அறிந்திருக்கிறோம். அதன் பழமையைத் தெரிந்திருக்கிறோம். தமிழ்மொழி இலக்கண இலக்கியங்களைப் பெற்றுத் திகழ்கிறது என்பதையும் உணர்கிறோம். அதோடு தோன்றிய மொழிகள் பல அழிந்து விட்ட போதும் சீனமொழியைப் போல் தமிழ் இன்றும் சிறந்து விளங்குவதைப் புரிந்திருக்கிறோம். அப்படிப்பட்ட அரியதொரு மொழியைப் பெற்றிருக்கின்ற நாம் அம்மொழியைப் பெருமையோடு பேசவோ, படிக்கவோ துணிவில்லாமல் இருக்கிறோம். இது புரியாத புதிராக இருக்கிறது.
சீன, மலாய் மாணவர்கள் படிப்பதற்குப் பல இதழ்கள் உள்ளன. தமிழ் மாணவர்களோ, பெரியவர்களோ படிப்பதற்குச் சிங்கப்பூரில் தமிழ் நாளிதழை விட வேறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இக்குறைபாட்டைப் போக்கவே தமிழ் அமுதம் வந்துள்ளது. தமிழ் அமுதத்தை அனைவரும் வாங்கிப் படிப்பார்கள் என்று நம்புகிறோம். அதோடு தமிழ் அமுதம் இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. இப்போது தமிழ் அமுதக் கட்டுரைகளை இணைய தளத்திலும் படித்தறிய வாய்ப்புள்ளது. இதையும் மாணவர்களும் பெரியோர்களும் படித்துவிட்டுத் தங்களின் கருத்துகளைச் சொல்லலாம்.சிராங்கூன் வட்டாரத்தில் உள்ள GGS புத்தக்கடையில் நீங்கள் தமிழ் அமுதத்தை வாங்கிக் கொள்ளலாம். இதன் விலை $3 வெள்ளி மட்டும்தான். உடனே உங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள்!
அன்புடன்
பி.சிவசாமி

premalatha chandrabose from india.
பதிலளிநீக்குi want to join tamil amutham
பதிலளிநீக்கு